மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி புரோட்டா விரும்பிகளே கவனம்.! சாப்பிடும்போதே பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை!!
தற்காலத்தில் புரோட்டா என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதனை விரும்பி உண்டு வருகின்றனர். இந்நிலையில் திருமணமாகி சில மாதங்களே ஆன வாலிபர் ஒருவர் புரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் தனியார் ஷோரூம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புருஷோத்தமனுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வந்த சண்முக சுந்தரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனால் புருஷோத்தமன் நேற்று இரவு கடையில் புரோட்டா வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது சண்முகசுந்தரி அவருக்கு போன் செய்துள்ளார்.
இந்நிலையில் மனைவியுடன் பேசிக்கொண்டே புருஷோத்தமன் புரோட்டாவை சாப்பிட்டுள்ளார். அப்பொழுது அவர் கவனக்குறைவாக சாப்பிட்ட நிலையில் சூடான பரோட்டா தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் அதனை விழுங்கவும் முடியாமல், வெளியே துப்பவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் தனது கணவர் பேசமுடியாமல் துடிதுடிப்பதை அறிந்த சண்முகசுந்தரி பதறியடித்து தனது கணவரின் வீட்டருகே உள்ள உறவினர்களுக்கு போன் செய்து அவரை சென்று பார்க்க கூறியுள்ளார். அவர்கள் உடனே அங்கு சென்று பார்த்தபோது புருஷோத்தமன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.
அவர்கள் உடனே புருஷோத்தமனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.