மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாமிக்கு படைத்த மதுவை குடித்த நபருக்கு நேர்ந்த சம்பவம்.. சோகத்தில் குடும்பத்தினர்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு பூஜைகள் நடந்த நிலையில், படையலில் உணவுடன், மது பாட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பூஜைகள் முடிந்ததும் குடத்தில் வைத்திருந்த மதுவை பூசாரி பக்தர்களுக்கு கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் அருள் ஆகியோர் அருகிலுள்ள சுடுகாட்டுக்கு சென்று குறித்து விட்டு வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து தான் மது குடித்ததால் தனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் விரைந்து வந்த தன்னை காப்பாற்ற வேண்டுமென கூறியுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் அங்கு சென்று பார்த்த போது அருளும், செல்வகுமாரும் மயங்கி கிடந்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்ட நண்பர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வகுமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அருளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்வகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் அவர் எப்படி இருந்தார் என்ற விவரம் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.