#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரோட்டில் அனாதையாக கிடந்த பை! திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பின் குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை சாத்தாங்காடு பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகை செல்வன். இவர் தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அப்பாசாமி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு ரோட்டில் பாலிதீன் பை ஒன்று கீழே கிடந்துள்ளது. மேலும் அது மின்னுவது போல தெரிந்துள்ளது.
இந்நிலையில் கார்த்திகேயன் அந்த பையை திறந்து பார்த்தபோதுm அதில் தங்கச் செயின், தங்க மோதிரம், வாட்ச், பணம் போன்றவை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனே அந்த தொகையை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
மேலும் ஏற்கனவே சென்னை பட்டாளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் நகை குறித்து புகார் அளித்திருந்ததை தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த நகைகள் மற்றும் பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ரோட்டில் கிடந்த நகையை எடுத்துச் செல்லாமல் பொறுப்பாக போலீசாரிடம் ஒப்படைத்த கார்த்திகை செல்வனின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.