#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உன்னால் என்ன செய்ய முடியும்? நான் உதயநிதி பிஏ... பெண்ணுக்கு மிரட்டல்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வாத்து புதூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி தேன்மொழி. இவர் வேலை விஷயமாக சென்னைக்கு சென்ற நிலையில், அங்கு ராஜேஷ் என்பவருடன் நட்புரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ராஜேஷ் தான் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்மணியிடம் பணம் பறித்து இருக்கிறார். மேலும், தேன்மொழி தனது தோழிகளிடம் இருந்தும் அரசு வேலைக்கு பணம் பெற்று கொடுத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்ட ராஜேஷ் வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திரும்ப தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி ராஜேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. வேலை வாங்கித் தர முடியாது. நான் உதயநிதி ஸ்டாலினின் பிஏ என்று கூறி மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினரும் விசாரணை செய்யாமல் வழக்கை கிடப்பில் போட்டதாகவும் தெரியவருகிறது.