மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு கடுமையான தண்டனை.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
உடுமலை பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்டம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் நவரசம். மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் இந்த இளைஞர் 2020ம் ஆண்டில் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஏழாம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீடியோ எடுத்து வைத்து கொண்டு வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்றும மிரட்டியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் நவரசத்தை கைது செய்த போலீசார், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர். திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நவரசத்திற்கு 70 ஆண்டுகள் சிறையும் 40,000 ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஒன்றரை ஆண்டுகளில் 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பாலியல் குற்றவாளிக்கு மாபெரும் எச்சரிக்கை பாடமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.