திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணனை ஓட ஓட வெட்டி கொன்ற தம்பி! விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த கேவலமான உண்மை!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கே.என்.கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார். 33 வயது நிறைந்த அவர் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சிவகுமார் நேற்று மதியம் தனது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு நண்பர்களுடன் வந்த சிவகுமாரின் தம்பி தேவேந்திரன் அவரை வெட்ட முயற்சி செய்துள்ளார்.
ஓட ஓட வெட்டி கொலை
பயந்துபோன சிவகுமார் உடனே அவரிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் தேவேந்திரன் சிவகுமாரை துரத்தி பிடித்து பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மாமியாருடன் தகாத உறவு
மேலும் தேவேந்திரன் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது தேவேந்திரன், எனது அண்ணன் சிவகுமாருக்கு என் மாமியாருடன் தகாத தொடர்பு இருந்தது. இதுகுறித்து பலமுறை கண்டித்தும் சிவகுமார் கேட்கவில்லை. அதனாலேயே நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டிக் கொன்றதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.