திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாயின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட மகன், மகள்கள்.... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள வீரானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் துரை - பரிமளா தம்பதிகினர். இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். பரிமளாவின் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இந்நிலையில் பரிமளாவிற்கு காமராஜ் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த வந்துள்ளனர். இச்சம்பவம் பரிமளாவின் மகன் மற்றும் மகள்களுக்கு தெரியவே அவர்கள் அனைவரும் பரிமளாவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மிகவும் சோகத்தில் இருந்த பரிமளா, காமராஜ் உடனான உறவை முறித்துள்ளார்.
இதனால் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார் காமராஜ். இந்நிலையில் பரிமளா தனது இரண்டாவது மகள் ராஜேஸ்வரி உடன் புதுப்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள காத்தவராயன்சாமி கோவிலுக்கு வழிபட சென்றுள்ளனர். இதனை அறிந்த காமராஜ் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர் பரிமளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் காமராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரிமளா மற்றும் அவரது மகள் இருவரையும் குத்தி கொலை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து புதுப்பாளையம் காவல் நிலையத்தில் கூறி சரணடைந்துள்ளார் காமராஜ்.