பல ஆண்டுகால கள்ள காதல்!! உறவை துண்டித்த பெண்ணிற்கு கடைசியில் நேர்ந்த கொடுமை!! பதறவைக்கும் சம்பவம்..



Man killed his illegal lover near Salem

தன்னுடனான கள்ள உறவை நிறுத்திக்கொள்ளும்படி கூறிய பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கருப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சித்ரா என்ற பெண், தனது கணவனை பிரிந்து இரண்டு மகள்களுடன் வசித்துவந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஏழுமலை என்பவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகிவந்துள்ளனர்.

இந்நிலையில் சித்ராவின் மகள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்ததால், இனி தனது வீட்டிற்கு வரவேண்டாம் என தனது கள்ளக்காதலன் ஏழுமலையிடம் கூறியுள்ளார் சித்ரா. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை சித்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார் ஏழுமலை.

தான் வரவேண்டாம் என கூறியும், ஏழுமலை வீட்டிற்கு வந்ததால் மீண்டும் அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, அருகில் கிடந்த கத்தியை எடுத்து சித்ராவை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.