மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் மனைவியை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவன... விசாரணையில் வெளியான உண்மை.!
நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(57). இவர் விஜயலட்சுமி(34) என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகனும் 12 வயதில் மகளும் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் ஆன செல்வம் கிடைக்கும் பணம் அனைத்தையும் குடித்து செலவு செய்து இருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவி விஜயலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார் செல்வம். இது தொடர்பாக விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜயலட்சுமி மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து செல்வத்தின் மீது சந்தேகம் கொண்ட காவல் துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.