மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிக்கிற டீயில் இனிப்பு குறைவாக இருந்ததால், கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!
உத்தரபிரதேசத்தில் 40 வயது நபர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்த பப்லு குமார் என்பவருக்கும், ரேனு என்ற பெண்ணிற்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர் தற்போது கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் ரேனு, தனது கணவன் பப்லு குமாருக்கு காலையில் தேநீர் போட்டுக் கொடுத்துள்ளார். அதில் சர்க்கரை குறைவாக இருந்ததால் பப்லு குமார், ரேனுவிடம் சண்டைபோட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பப்லு குமார் சமயலறையில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு எழுந்த மூன்று பிள்ளைகளும் சமயலறைக்கு சென்று பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்த பப்லு குமாரை தேடி வருகின்றனர்.
தேநீரில் சர்க்கரை இல்லாததால் கணவர் பப்லு குமார், அவரது மனைவியை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. அவர்களின் மூன்று பிள்ளைகள் இது குறித்து சாட்சி அளித்துள்ள நிலையில், விரைவில் பப்லு குமார் கைது செய்யப்படுவார் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.