ஆசையாக அக்காவுடன் நிச்சயம் செய்து, தங்கையுடன் திருமணம் செய்த இளைஞர்…இறுதி கட்டத்தில் நடந்த பரபரப்பு நிகழ்வுகள்..



Man married bride sister at last time

இளைஞர் ஒருவருக்கு இளம் பெண் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில் பெண்ணின் தங்கையுடன் திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது புதுக்கோட்டை விடுதி. இந்த கிராமத்தில் வசித்துவருபவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜ்குமார் (30). இந்நிலையில் ராஜ்குமாருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மருங்கபள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மக்களுக்கும் திருமணம் செய்வதை பேசி முடிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தது.

நேற்று இருவருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்துவந்தனர். மேலும் அந்த பகுதி முழுவதும் திருமண போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இருவீட்டாருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமாகிவிட்டதாக பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் பின் இரண்டு வீட்டாரும் அமர்ந்து பேசி, பெண்ணின் தங்கை ஆசிபாவை (19) ராஜ்குமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.

இதற்கு ஆசிபாவும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் சினிமாவில் நடைபெறும் என்றாலும், நிஜத்திலும் இதுபோன்று நடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.