மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோரம் உறங்கிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. மனைவி என நினைத்து கொடூரன் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்.!
மனைவி என நினைத்து சாலையோரம் உறங்கிய இளம்பெண்ணை ஒருவர் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் கணவனை இழந்த தனலட்சுமி என்ற ஒரு பெண் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவருக்கு திருவண்ணாமலையச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து திருவண்ணாமலையில் வசித்து வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தனலட்சுமி தேவேந்திரனைப் பிரிந்து ஆம்பூருக்கு வந்திருக்கிறார்.
தேவேந்திரன் அழைத்தும் தனலட்சுமி வர மறுத்ததால் ஆவேசமடைந்த அவர், தனலட்சுமி என நினைத்து அருகாமையில் உறங்கிய கௌசர் என்ற இளம் பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கௌசர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தடுக்க முயன்ற தனலட்சுமிக்கும் கத்திக்குத்து விழுந்ததால் அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.