மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எங்கள பிரிக்க பாக்குறியா நீ.." கணவன் படுகொலை.!! கள்ளக்காதலன் கொடூர செயல்.!!
பெங்களூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல்
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரத்தில் வசித்து வந்தவர் அசோக்குமார். சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் அசோக்குமார் மாதத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கி இருக்கிறார். இதன் காரணமாக அவரது மனைவி சுகன்யாவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் சத்தியமூர்த்தி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
கண்டித்த கணவன்
சத்தியமூர்த்தி மற்றும் சுகன்யாவிற்கு இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பை பற்றி தெரிய வந்ததும் அசோக் குமார் இருவரையும் கண்டித்திருக்கிறார். இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சுகன்யா தனது குழந்தைகளுடன் பெங்களூர் அருகே உள்ள பிக்கனஹள்ளி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அதேபோல் தனது வேலைகளை முடித்த அசோக் குமாரும் தீபாவளியை கொண்டாட தனது மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கோவை: "மகனைத்தேடி நாங்களும் போறோம்" - கடிதம் எழுதிவைத்து தம்பதி விபரீதம்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
செல்போன் மூலம் வரவழைத்து கொலை
இந்நிலையில் நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த அசோக் குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சத்தியமூர்த்தி அவரிடம் தனியாக பேச வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தியை பார்ப்பதற்காக அசோக்குமார் சென்றுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அசோக்குமாரை கொடூரமாக படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் சத்திய மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை: எமனை நேரில் பார்த்த பள்ளி மாணவி; உயிரை காத்த இரண்டு காக்கி தெய்வங்கள்.! பரபரப்பு வீடியோ உள்ளே.!