கோவை: எமனை நேரில் பார்த்த பள்ளி மாணவி; உயிரை காத்த இரண்டு காக்கி தெய்வங்கள்.! பரபரப்பு வீடியோ உள்ளே.!
சாலைகளில் நடந்து செல்லும்போதும், அதனை கடக்கும்போதும் கவனமாக செல்ல வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், நமது சிறு அலட்சியமும் விபத்திற்கு வழிவகை செய்து, மரணத்தையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில், மாணவி ஒருவர் உயிர்தப்பிய காணொளி வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் சாலை சந்திப்பு பகுதியில், காவல் அதிகாரி ஒருவர் சாலையை கடந்துகொண்டு இருந்தார். அப்போது லாரி வந்த நிலையில், காவலரை மட்டும் கவனித்தவாறு பள்ளி மாணவியும் பின்தொடர்ந்து சாலையை கடக்க முற்பட்டார்.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு... பெண்களை வீடியோ எடுத்த போலீஸ்காரர்.!! மடக்கி பிடித்த பொதுமக்கள்.!!
இரண்டு காக்கி தெய்வத்தால் தப்பித்த உயிர்
அதற்குள் லாரி வந்துவிட்ட நிலையில், மாணவியின் மீது லாரி மோதவிருந்தது. லாரி ஓட்டுநர் சுதாரித்து பிரேக் அடித்துவிட, காவல் அதிகாரியும் எதிரில் இருப்பவர்களை கவனித்து உடனடியாக சுதாரித்து மாணவியின் கையைப்பிடித்து இழுத்து மீட்டார்.
இதனால் மாணவி லேசான காயம் இன்றி உயிர்தப்பிய நிலையில், அவரை அமைதிப்படுத்தி, அறிவுரை கூறி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் மற்றும் காவலரின் செயல்கள் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: குளம் நிரம்பி வெளியேறிய நீர்; சாலையில் ஓடிய மீன்கள்.. அள்ளிச்சென்ற கோவையன்ஸ்.!