மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை! தற்கொலை என நம்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பகீர் பின்னணி!
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மனைவி ராகவி. மணிமாறனின் நண்பர் விஸ்வநாதன். அவர் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு முதல்நாளன்று விஸ்வநாதன் மற்றும் மணிமாறன் இருவரும் ஒன்றாக அமர்ந்து மதுஅருந்தி கொண்டிருந்துள்ளனர்.
இதனைக்கண்ட ராகவி தனது கணவரை கண்டித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை கொல்லைப்புறத்தில் தலையில் காயத்துடன் மணிமாறன் மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். அதனை கண்டு ராகவி அதிர்ச்சியில் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மணிமாறனின் சடலத்தை மீட்டனர். மேலும் மணிமாறன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என நம்பிய அவரது உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவசரஅவசரமாக இறுதிச்சடங்கு முடித்தனர்.
அதனைத் தொடர்ந்து விஸ்வநாதன் பழனிக்கு திரும்பி விட்டநிலையில், மணிமாறனின் தாயார் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்வது தெரிந்து பயத்தில் விஸ்வநாதன் போலீசாரிடம் சரணடைந்தார்.
மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நான் மதுபாட்டிலால் மணிமாறனின் தலையில் அடித்து கொன்று விட்டேன் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டது போல உடலை தூக்கில் தொங்க விட்டேன் என கூறியுள்ளார் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.