சமூக வலைத்தளங்களில் அடுத்தவரை கிண்டல் கேலி செய்பவரா நீங்கள்? அப்போ இத படிங்க!



Man suicide because of musically app

டப்ஸ்மாஷ், மியூசிக்கலி போன்ற செயலிகள் மூலம் இன்றைய இளைஞர்கள் இளம்பெண்கள் பொழுதுபோக்கு என்ற பெயரில் சிலசமயம் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். 

பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்-ல் இன்றைய இளைஞர்கள் தங்களது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். வித்தியாசமாக வேடம் அணிந்து சினிமா வசனங்களுக்கு நடித்துக் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றுவது தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

music show

இந்நிலையில் வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்ற வாலிபர் பெண் குரலில் பாடல்களை பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றி வந்துள்ளார். கலையரசனின் பதிவை பார்த்த பலர் அவரை கேலி கிண்டல் செய்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் சற்றும் மனம் தளராத கலையரசன் நான் தொடர்ந்து பெண் குரலில் பாடுவேன் என்று அவர் கூறியதாக கலையரசனின் நண்பர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

யாருடைய கேலி கிண்டல்களையும் சட்டை செய்யாத கலையரசன் ஒரு கட்டத்தில் அந்த கேலி கிண்டல்களை சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார். மன அழுத்தத்தின் உச்சத்திற்கு சென்ற கலையரசன் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார். மியூசிக்கலி ஆப் மூலம் பெண்குரலில் பாடல் பாடிய ஒருவர் மீது சமூக வலைதளவாசிகள் வைத்த விமர்சனம் ஓர் உயிரை பறித்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.