மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மொபைலில் செய்த பெரும் தவறு! மனைவியிடம் கதறி அழுது வாலிபர் எடுத்த பகீர் முடிவு! அதிர்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில் ஆன்லைனில் ரம்மி போன்ற விளையாட்டிற்கு அடிமையாகி, அது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு விழுப்புரத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே சேர்ந்தனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பச்சையப்பன். 32 வயது நிறைந்த இவர் திருபுவனையில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த தம்பதிக்கு 2 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பச்சையப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் மனைவி மற்றும் மகளுடன் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். அப்பொழுது அவர் தான் ஆன்லைனில் ரம்மி விளையாடியதாகவும், அதில் பெருமளவில் பணத்தை இழந்துவிட்டதாகவும் கதறி அழுது தனது மொபைலை தூக்கி எறிந்துள்ளார்.
இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பச்சையப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பச்சையப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.