மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏடிஎம்க்கு நாமம் போடா நினைத்தவரை, விலங்கு மாட்டி கம்பி எண்ணவைத்த காவல்துறை!!
திருட்டுத் தொழில் என்பது தற்போது மிகவும் பரவலாக பரவி வரும் குற்றங்களில் பெருங்குற்றமாக கருதப்படுகிறது. விலை மதிப்புள்ள வாகனங்கள் முதல் விளைந்து கிடக்கும் தக்காளி வரை திருடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சின்னமனூர் அருகே ஏடிஎம்மில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்பகுதியில் இருந்த ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முடிவு செய்து ஏடிஎம்க்கு சென்றுள்ளார்.
அப்பொழுது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட பாண்டியனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இது குறித்து பாண்டியனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.