மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சி அருகே பயங்கரம்.!! ஆணுறுப்பில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வாலிபர்.!! மனைவி பரபரப்பு புகார்.!!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாலிபர் ஒருவர் ஆணுறுப்பில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் ராஜ். 41 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் ரமேஷ் மற்றும் சங்கர் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரமேஷ் தயாளன் மற்றும் சங்கர் ஆகியோர் மது அருந்தி உள்ளனர்.
அப்போது அந்த வழியாகச் சென்ற அருண் ராஜை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அருண் ராஜ் மற்றும் ரமேஷ், தயாளன், சங்கர் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இவர்கள் மூவரும் சேர்ந்து அருண் ராஜை கட்டையால் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் அருண் ராஜின் ஆணுறுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ள அருண் ராஜின் மனைவி தனது கணவரை ஆணுறுப்பில் தாக்கி படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.