திருமணப் பெண்ணிற்க்கு வந்த போன்கால்.! அதிர்ந்துபோன குடும்பத்தினர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!



man-who-threaten-girl-arrested

ரூ.10 லட்சத்திற்க்கு ஆசைப்பட்டு  பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தநிலையில், அந்தப் பெண்ணின் செல்போனிற்க்கு  மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு, ரூ 10 லட்சம் தராவிட்டால்  மாப்பிள்ளை வீட்டாரிடம், உன் நடத்தை சரியில்லை மற்றும் பல காரணங்கள் சொல்லி உன் திருமணத்தை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதனைக் கேட்ட அந்த பெண்  அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அந்த பெண் தன் தாயாரிடம் இதைப் பற்றி தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்ட அவரது தாயார் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருமணப் பெண்ணை மிரட்டியவர் ஒரு பொது தொலைபேசி பூத்திலிருந்து பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த தொலைபேசி பூத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் சோதனை செய்தனர். இந்த சோதனையில், இதில் மிரட்டல் விடுத்த நபர் பாரிமுனை, பிடாரியார் கோயில் தெருவைச் சேர்ந்த பாலசாமி (வயது40) என்பது தெரியவந்தது.

அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் பாலசாமியை கைது செய்த போலிஸார் விசாரணை செய்ததில் , நான் மிரட்டியது உண்மைத்தான், மிரட்டினால் பணம் கிடைக்கும் என்ற ஆசையில், யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக பொது தொலைபேசி பூத்தில் இருந்து பேசி மிரட்டினேன் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.