மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாலி கட்டிய அடுத்த நொடியே மண மேடையில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை... கதறி அழுத மணப் பெண்... நடந்தது என்ன.?
கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹொன்னூறு சாமி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட தினமன்று அதே ஊரில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமகன் மணமகளுக்கு தாலி கட்டிய அடுத்த நொடியே சற்று வித்தியாசமாக காணப்பட்டார். அதனையடுத்து மணமகன் தனது குடும்பத்தினரிடம் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். ஒருவேளை அஜீரண கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து உறவினர்கள் மாப்பிள்ளைக்கு சோடா வாங்கி கொடுத்துள்ளனர்.
சோடாவை குடித்த அடுத்து நொடியே மாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த மணப்பெண் கதறி அலறினார். உடனே மாப்பிள்ளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.