திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மூன்று மாதத்தில் முடிந்த திருமண வாழ்க்கை.. கதறும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.!
வாழப்பாடி, துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் கிராமத்தில் அருள்முருகன்-அபிராமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணமான 3 மாதங்களிலேயே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் சம்பவத்தன்று வழக்கம்போல் அருள்முருகன் மற்றும் அபிராமி இடையே ஏற்பட்ட வாய் தகராறில் மனமுடைந்த அபிராமி அருகிலிருந்த விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த அருள்முருகன் அதிர்ச்சியடைந்து அவரும் அதே கிணற்றில் குதித்துள்ளார்.
இந்நிலையில் அந்த விவசாய நிலத்தின் உரிமையாளரான மாணிக்கம் கிணற்றில் 2 சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வாழப்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் வாழப்பாடி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் மிதந்த புதுமண தம்பதியினரின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணமான மூன்று மாதத்திலேயே கணவன் மனைவி குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.