திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த திருமணமான நபர் கைது!
சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை கடந்த 2017 ஆம் ஆண்டு அமிர்தராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆனால், ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ராஜாவின் முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜாவுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.