மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி ராஜ வீதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும் 26 வயதான கோமதி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதில் கூலி வேலைக்கு செல்லும் விக்னேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே தனது கணவன் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அந்தேரிப்பட்டியில் வசித்து வரும் தனது தாய் ரமணியிடம் கோமதி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனது மாமியார் ரமணிக்கு போன் செய்த விக்னேஷ் உங்களது மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார். இதில் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் முகமதியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே ரமணி தனது மகளிடம் மருமகன் விக்னேஷ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்ததாகவும், தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோமதியின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.