மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலை கண்டித்த மாமியார்.. கட்டையால் அடித்துக் கொன்ற மருமகள்.!
செஞ்சி அருகே கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாண்டியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன்-சின்ன பாப்பா தம்பதி. இந்த தம்பதியினருக்கு பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் காலை இழந்ததால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது மனைவி சங்கீதா கூலி வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இதில் வேலைக்கு சென்ற இடத்தில் சங்கீதாவுக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை அறிந்த மாமியார் சங்கீதாவை கண்டித்துள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமியார் மருமகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மருமகள், மாமியாரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சின்ன பாப்பாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சங்கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.