மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை இழந்த பரிதாபம்..!



mathuku-aasaipattu-manaiviyai-ilantha-parithapam

மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் கீழவெளியை சேர்ந்தவர் கோவிந்தன்-சுமதி தம்பதியினர். கோவிந்தன் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம் போல் ஒரு நாள் கோவிந்தன் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

அதனை அடுத்து சுமதி கோபித்து கொண்டு கந்தமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு கோவிந்தன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதனம் செய்து அழைத்து வந்துள்ளார். பைக்கில் வரும் வழியில் சுமதியை ஒரு இடத்தில் இறக்கி விட்டு மதுக்கடைக்கு சென்றுள்ளார்.

suside

மதுக்கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது சுமதி ரோட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுமதி உயிரிழந்துள்ளார்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். 

கோவிந்தனின் நடத்தையை அறிந்து வீட்டிலேயே சுமதி விஷம் குடித்தாரா? அல்லது கையில் விஷத்துடன் வந்து கணவர் மதுக்கடைக்கு செல்வதை பார்த்து விட்டு விஷம் குடித்தாரா? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.