மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் வராம அடிக்கல் நாட்டு விழா எப்படி? - காங்., எம்.எல்.ஏவை வெளுத்து வாங்கிய திமுக பிரமுகர்.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பகுதியில் அரசு மகளிர் கலை & அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் காலி நிலத்தில், அரசின் திட்டப்படி குறிப்பிட்ட பகுதியில் 4.40 கோடி மதிப்பீட்டில் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து, நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது. இதற்கு மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்நிகழ்வு நடைபெற்று முடிந்தபின்னர், அங்கு வந்த திமுக நகர செயலாளர், நகராட்சி தலைவர் செல்வராஜூ, நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியது எப்படி?.
நகராட்சி தீர்மானமே நிறைவேற்றாத இடத்திற்கு கட்டிடம் எப்படி கட்ட முடியும்?. கவுன்சிலர்கள் இங்கு வராமல் எப்படி நிகழ்ச்சி நடந்தது?. காங்கிரஸ் ஓட்டு மட்டும் வாங்கி ஜெயித்தீர்களா?. திமுகவினர் ஓட்டில் தானே வெற்றிபெற்றார்?.
உங்களை ஜெயிக்க வைத்தது நான் தான். இவ்வாறு நடப்பது எப்படி?. என தனது கண்டனத்தை அவர் தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் அமைதியாக அனைவரும் அங்கிருந்து சென்றனர்.