பள்ளி சீருடையுடன் புதிய போதையில் மிதக்கும் பள்ளி மாணவர்கள்; மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்..!



Mayiladuthurai School Boys Drug Addict 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் சமீபத்தில் போதைப்பொருளை உபயோகம் செய்து வருவது அதிகரித்து இருக்கிறது. 

புகை, மது, கஞ்சா, கூலிப் என்பதை தாண்டி அனபெண்ட்-ஐ பயன்படுத்தியும் போதையாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அங்குள்ள பூங்காவில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்றனர். 

அவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்ததும், வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பூங்கா பகுதியில் குழுவாக சேர்ந்து போதைப்பொருளை உட்கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்த விடியோவும் வெளியானது. 

இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, மாணாக்கர்கள் போதைப்பொருளை உட்கொண்டது தெரியவந்தால் அல்லது அவர்கள் வைத்திருந்தால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார்.

இனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து பூங்கா போன்ற இடங்களில் இருக்கும் மாணவர்களை விசாரிக்கவும், போதைப்பொருள் உபயோகம் செய்தால் கண்டிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.