மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கவசம் அணியாமல் அலட்சிய பயணம்: லாரி சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி பெண் பரிதாப பலி.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சோழம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 41). கணவர் முத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். நேற்று காலை தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு, தனது வீட்டிற்கு செல்ல குறுக்கு சாலையில் இருந்து தென்னைமரசாலை முக்கிய வீதிக்கு வந்துள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயங்கிவந்ததாக கூறப்படுகிறது. சாலையில் அலட்சியமாக வந்தபோது, அப்பகுதி வழியே லாரியும் வந்துள்ளது. இந்த சம்பவத்தில் லாரியின் நடுப்பகுதியில் மோதி கீழே விழுந்த ராஜேஸ்வரி, பின்பக்க சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கரூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலசுப்பிரமணியை கைது செய்தனர். மேலும், குறுக்கு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வரும்போது அலட்சியமாக வந்தது விபத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.