#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரயில்வே வேலை என ஆசையாக பேசி பகிரங்க மோசடி.. 4 பேரிடம் ரூ.60 இலட்சம் வசூல்.. மக்களே உஷார்..!
ரயில்வே வேலை வாங்கித்தருவதாக 4 பேரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவர் பொறியியல் பட்டதாரி. இவருக்கும், திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கராஜிடம் தெற்கு ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுரேஷ் பல தவணைகளாக ரூ.13 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தராமல் சுரேஷ் தலைமறைவாக இருந்ததால், தங்கராஜ் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், தங்கராஜ் ஶ்ரீநாத் உட்பட நான்கு பேரிடம் இதுவரை சுரேஷ் 59 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனால் தலைமறைவான சுரேஷை தீவிரமாக காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.