#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இதோடு நிறுத்திவிடு" என கண்டித்த அக்கா... புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..! கண்ணீர் சோகம்..!
திருமணமான சில நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அருகே ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் விஜயன் (வயது 29). இவர் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில், கடந்த 25 நாட்களுக்கு முன்னதாக இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுமாப்பிள்ளை விஜயன், தனது அக்கா வீட்டிற்கு விருந்திற்காக சென்றபோதும் அவர் மது போதையில் இருந்துள்ளார். இதன் காரணமாக விஜயனின் அக்கா "ஏன் அதிகமாக குடிக்கிறாய்?, என்ன காரணம்?, உனக்கு திருமணம் ஆயிற்று, இதோடு நிறுத்தி விடு" என்று கண்டித்துள்ளார்.
தனது அக்கா கூறியதைக் கேட்டு வந்த விஜயன் வீட்டிற்கு வந்தவுடன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின் இது குறித்து காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விஜயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 25 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.