மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதியிழக்க வைத்த மதுவரக்கன்.. கடப்பாறையால் அண்ணனை கொன்று தூக்கிய தம்பி..!
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கடப்பாரையால் தம்பி அடித்துக்கொண்ற பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் குமார். இவரின் தம்பி வீராச்சாமி. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், உறவினர் வினோத் என்பவருடன் சேர்ந்து மூவரும் மதுபானம் அருந்தியுள்ளனர்.
அப்போது குமாருக்கும், அவரது தம்பி வீராச்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி இருவரும் சண்டையிட்டனர்.
இந்த சம்பவத்தின் போது ஆத்திரமடைந்த வீராச்சாமி, அண்ணன் குமாரை கடப்பாரையால் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக குமாரின் மனைவி ராதிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வீராச்சாமியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.