மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாய்க்காலில் மூழ்கிவந்து., திடீரென பெண்ணிடம் காமுகன் வெறிச்செயல்.! வெளுத்தெடுத்த பொதுமக்கள்..!!
வாய்க்காலில் மூழ்கியவாறு வந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை சுங்க கேட் வேளாளர் தெருவை சார்ந்தவர் கணேசன். இவரின் மனைவி துர்கா. துர்கா நேற்றிரவு வாய்க்காலில் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது வாய்க்காலில் மூழ்கியவாறு திடீரென வந்த மர்ம நபர் பெண்ணின் வாயை பொத்தி வாய்க்காலுக்குள் இழுத்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதனால் துர்கா அலறவே, அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டதுடன் கரைக்கு திரும்பி கொண்டிருந்த இளைஞனை பிடித்தனர். இதனையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரின் வாகனத்தில் ஏற்றி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
அந்த சமயத்தில் காமுகனின் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் கயவனை நொறுக்கி எடுத்து நிலையில், அதனை தடுக்க முயன்ற காவல்துறையினரின் வாகனமும் தாக்கப்பட்டது. பின்பு இளைஞனை கைது செய்து காவல்நிலையத்தில் நடத்திய விசாரணையில், அவன் கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவனின் மகன் சிவகுமார் என்பது உறுதியானது. இதனையடுத்து குளித்தலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.