மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏலம் எடுத்தவர்கள் டிமிக்கி கொடுத்ததால், ஏலசீட்டு நடத்தியவர் விரக்தியில் தற்கொலை; கடலூரில் பரிதாபம்..!
தன்னிடம் ஏலசீட்டு எடுத்தவர்கள் முறையாக பணம் கொடுக்காத காரணத்தால் அதனை நடத்தியவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவர் கீழ்ப்பட்டாம்பாக்கம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வைத்து ஆட்கள் பிடித்து மாதாந்திர ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார்.
இவரிடம் ஏலம் எடுத்தவர்களில் பலரும் சரிவர முறையாக பணம் செலுத்தாமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் அவர்களிடம் முறையிட்டு ராமலிங்கம் மனவிரக்திக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இராமலிங்கம் நேற்று தனது கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலம் எடுத்தவர்கள் சரிவர பணம் கொடுக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.