மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தையுடன் விளையாட பக்கத்து வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவி கர்ப்பம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூங்கிலேரியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அதே பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருக்கும் போது குழந்தையுடன் விளையாட பக்கத்து வீட்டில் வசித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இளம் பெண் வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அந்தப் பெண் இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்லாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நிலை பாதித்துள்ளது.
இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் விசாரித்ததில் காளிதாஸ் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.