திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீண்டும் மிரட்டும் மழை!.. அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
வங்கக் கடலில் நாளை 16-ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 18-ஆம் தேதி அது மேலும் வலுப்பெற்று தமிழக கடலோரம் நெருங்கி வரும். இதை தொடர்ந்து கடலோர தமிழக மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழையால், தமிழகத்தில் கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. சீர்காழியில் 122 வருடங்களுக்கு பிறகு அதிகபட்சமாக 44 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் நாளை, அனுமான் அருகே வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரத்தை நெருங்கி, 18-ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு வரும்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.
அதன் பிறகு தமிழக கடலோர பகுதிக்குள் 19-ஆம் தேதி இரவு நுழையும். அது முதல் 20, 21-ஆம் தேதிகளில், தமிழக கடலோர மாவட்டங்களான, புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்கள், மன்னார் வளைகுடா பகுதிகளில் கனமழை முதல் மிககனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும் தற்போது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.