திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: மிக்ஜாம் புயல் எதிரொலி.. நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை.! தமிழக அரசு அறிவிப்பு.!!
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டினம் - நெல்லை இடையே கரையை கடக்க இருக்கும் புயலின் தாக்கம் சற்றும் குறையாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு இன்று மட்டுமின்றி நாளையும் விடுமுறை அறிவித்துள்ளது.
மேலும் புயலின் எதிரொலியால் மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற பணிகளுக்கு வெளியே வர வேண்டாம் என்றும் அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.