கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
மாணவர்களுக்கு மடிக்கணினிகள் எப்போது வழங்கப்படும்.? அமைச்சர் அன்பில் மகேஷ்
படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் கூறியபடி மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. இந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த ஆட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்ததன்படி 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு வகுப்பில் மடிகணினி வழங்கப்பட்டது. ஒரு வேளை பள்ளியில் மடிக்கணினி அளிக்கப்படாத நிலையில் முதலாம் ஆண்டு கல்லூரி சேரும்போது மடிக்கணினி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது கொரோனா காலம் என்பதால் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் பேசுகையில், படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் கூறியபடி மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 517 மடிக்கணினிகள் தர வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.