மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒமிக்ரானும் - டெல்டாவும் இணைந்து 3 ஆவது அலையாக பரவுகிறது - அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் ஆகியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியை நாளை தமிழ்நாடு முதல்வர் தொடங்கிவைக்கிறார்.
ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் ஆகியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு அவை செலுத்தப்படும்.
ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 3 நாட்கள் முதல் 4 நாட்களில் நெகட்டிவ் என முடிவு வருகிறது. தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வரை வைரஸ் இணைந்து மூன்றாவது அலை பரவுகிறது" என்று தெரிவித்தார்.