மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை உறுதி?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!
நைஜீரிய நாட்டில் இருந்து வந்த 7 பேருக்கு நடந்த கொரோனா உறுதியாகியுள்ளது. ஒருவரின் மாதிரி பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். இதன்போது அவர் பேசுகையில், "ஒமிக்ரான் வகை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
நைஜீரிய நாட்டில் இருந்து வந்த 7 பேருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இவர்களில் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவரின் மரபணு பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூர் ஆய்வகத்தில் இருந்து இன்றோ நாளையோ பரிசோதனை முடிவுகள் தரப்படும். இவர்கள் 7 நபர்களும் சென்னை கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.