அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் ஏன் இந்தி படிக்க கூடாது? அமைச்சர் கேள்வி!



minister pandiyarajan talk about hindi

தமிழக மாணவர்கள் பல மொழிகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதில் மாணவர்களின் விருப்ப பாடமாக ஒரு அயல்நாட்டு மொழியையும், ஒரு தேசிய மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதனையடுத்து தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் விருப்பப்படி இந்தி மற்றும் பிரெஞ்சு மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேறு மொழி பாடம் கற்பிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், இதுபோன்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், நச்சு கருத்துகளை தி.மு.க.வினர் பரப்பி வருகிறார்கள். தமிழகத்தில் பல சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தி.மு.க.வினர் தான் நடத்துகிறார்கள். இந்த பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது.

minister

ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மட்டும் விருப்ப பாடமாக இந்தியை தேர்வு செய்து படிப்பதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். தமிழக இளைஞர்கள் இருளில் இருக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் நோக்கமாக உள்ளது.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 101 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 
தமிழாய்வு மாணவர்கள் வேற்று மொழி அறிவு பெற்று பொருளாதாரத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது இந்த திமுக என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.