மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவர்களுக்கு குஷியான செய்தியை அறிவித்த அமைச்சர் பொன்முடி.!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலகங்களில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
கல்லூரிகள் திறந்தாலும் ஏற்கனவே அறிவித்தபடி 1, 3, 5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். இதில் மாணவர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.