மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தூக்கிடுவேன்" - அமைச்சர் சேகர் பாபுவின் ஆடியோ வைரல்.. காரணம் என்ன?
சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் பிகே சேகர் பாபு. இவர் தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும், சென்னை வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராகவும் சென்னையின் வளர்ச்சிப் பணிகளை கண்காணித்து வருகிறார்.
இதனிடையே, அமைச்சர் சேகர் பாபு சைவ சிந்தாந்த ஆர்வலர் கார்த்திக் என்ற நபரை மிரட்டுவதாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் பேசியது உண்மையில் அமைச்சரா? வேறு யாரெனுமா? என்பது தெரியவில்லை. இருப்பினும், அமைச்சர் பேசியதாக ஆடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு பேசும்போது கொஞ்சம் பொறுமையா கையாண்டிருக்க வேண்டும். டேய்.. தூக்க சொல்லிருவேன் என்றெல்லாம் பேசியிருக்க கூடாது. மக்களோ, அமைப்புகளோ மற்றும் இயக்கங்களோ கேள்வி கேட்டால் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும்.எந்த இடத்திலும் அவசரப்பட்டு வார்த்தையை விடக்கூடாது pic.twitter.com/yPJlvCA0iH
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) November 18, 2024
இதையும் படிங்க: 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்; தலைமறைவான அரசியல்கட்சி பிரமுகருக்கு காவல்துறை வலைவீச்சு.!
அந்த ஆடியோவில் பேசும் நபர், கும்பகோணம் சூரியனார் கோவில் விவகாரத்தில், அறநிலையத்துறை கையில் எடுத்து அதனை கட்டுப்படுத்தக்கூடாது. ஆதீனம் வாயிலாகவே கட்டுப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை ஆதீனத்தை கைப்பற்றினால், சைவ அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். உங்களின் வீட்டு முன்பு எதிர்க்கட்சி சார்பில் போராட்டம் நடக்கும் என கூறினார்.
இதனைக்கேட்ட அமைச்சரோ, சட்டப்படி அனைத்தையும் செய்வோம். யார்கிட்ட பேசுகிற, வந்து போராட்டம் பானு பார்க்கிறோம். சூரியனார் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் இதுவரை நான் இல்லை. நீ போராட்டம் என கூறியதர்காகவே கையகப்படுத்துகிறேன். உன்னால் முடிந்ததை பார். தூக்கசொல்லிடுவேன் உன்னை என கூறினார். இதுதொடர்பான ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 19 வயது இளம் திமுக நிர்வாகி மரணம்., அலட்சியமாக வேடிக்கை பார்த்தவாறு வாகனம் ஓட்டியவரால் சோகம்;