மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் கோயில்கள் திறப்பு எப்போது.? அமைச்சர் சேகர் பாபு கொடுத்த தகவல்.!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுத்து வந்ததை அடுத்து கடந்த மே மாதம் முதல் தமிழக்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வழிப்பாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கோவில் யானைக்கு தாய்லாந்து கண் மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்தாண்டு நடைபெற உள்ள குடமுழுக்கு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலை எப்பொழுது வருகிறதோ அப்போது கோவில்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.