மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இனி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும். எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.