ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#Breaking: "ஆளுநர் ரவியே வெளியேறு" - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேச்சு.!
தேசிய கீதத்தை அவமதித்தது ஆளுநர் ரவி தான், அவர்தான் வரம்பை மீறி செயல்படுகிறார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, 2025 சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு உரை நிகழ்த்த வந்திருந்தார். அப்போது, அதிமுக, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், அமளியில் ஈடுபட்டது. இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறி இருந்தார். இந்த விஷயம் சர்ச்சையானது. அவைக்குள் வந்த ஆளுநருக்கு, காங்கிரசின் சார்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: ஆளுநர் உரையை புறக்கணித்த விவகாரம்; துரைமுருகன் தீர்மானம் - ஒருமனதாக நிறைவேற்றம்.!
வரம்பை மீறி செயல்படுகிறார்
இந்நிலையில், ஆளுநர் ரவி வெளியேறிய விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், "ஆளுநர் நடந்துகொண்ட விதம் தமிழ்நாடு மக்களை, சட்டப்பேரவையை அவமதிக்கும் விதம். அவர் மக்களையும், பேரவையையும் அவமதிப்பு செய்துள்ளார். சட்டப்பேரவை வரம்புகளை, மரபுகளை மாற்ற ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநர் உரையை வாசித்தால், திமுக அரசு சாதனைகளை சொல்ல வேண்டும் என்றதால், சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல கூடாது என்ற எண்ணத்தால் அவர் நடந்துகொண்டார்.
வருத்தம் தெரிவிக்க வேண்டும்
51 பக்கத்தில் ஆளுநர் உரை தயார் செய்யப்பட்டு இருந்தது. இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி, ஆளுநர் உரையை அவைத்தலைவர் வாசித்தபின், இறுதியாக தேசிய கீதம் இசைத்து அவை முடித்துக்கொள்ளப்பட்டது. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையை வழங்கப்பட்டது. தேசிய கீததற்கு எப்போதும் தமிழ்நாடு அவமரியாதை செய்யாது. தவறான வாதத்தை ஆளுநர் முன்வைத்து இருக்கிறார். இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
ஆளுநர் ரவியே வெளியேறு
ஏற்கனவே அவர் தமிழ்நாடு மக்களால் புறந்தள்ளப்பட்டு வருகிறார். அவர் ஆளுநர் என்ற அதிகாரத்தை மறந்து, தேர்வு செய்யப்பட்ட அரசைபோல செய்கிறார். "ஆளுநர் ரவியே வெளியேறு" என்ற கோசத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். அவர் அவையை அவமதிப்பு செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தேசபக்தியில் நாங்கள் குறைந்தவர்கள் இல்லை. சீனப்போர் முதல் கார்கில் வரை அரசு நிதி வழங்கி இருக்கிறது. தேசபக்தி குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பவர் வெளியேறலாம்
வாழ்க பாரதம் என்றுதான் எங்களின் உரையை முடிக்கிறோம். ஆளுநரின் செயல்முறை சரியல்ல. அவரின் ஒரே நோக்கம், தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துக்கூறக்கூடாது என்பதுதான். தேசிய கீதம் வரை இருக்காமல், அவர் வெளியேறி, அவர்தான் தேசிய கீதத்தை அவமதித்து செல்கிறார். இரண்டு முறையும் அவரே தேசிய கீதத்தை புறக்கணித்து இருக்கிறார். ஆளுநருக்கான பதவிக்காலம் நீட்டிப்பு வழங்கப்படாமல் அவர் செயல்படுகிறார். பதவியில் அவர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார். ஒட்டிக்கொண்டு இருப்பவர் பதவியில் இருந்து வெளியேறுவது நல்லது" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் உத்தரவு.!