பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது.? அமைச்சர் கொடுத்த தகவல்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் இளநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் திறப்பு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.