மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவுங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்.!
சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் குடும்பத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டு கொண்டு வரும் பொருட்டு அரசும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது, "கடந்த மழை வெள்ளத்தை விட தற்போது சிறந்த பணிகளை அரசு மேற்கொண்டுள்ளதாக தமிழகம் வந்த மத்திய குழு பாராட்டி இருக்கிறது.
தமிழக முதல்வர் ரூ.5000 கோடி கேட்டு கோரிக்கை வைத்தது மக்களின் வரிப்பணத்தை மக்களுக்காக செலவிடவே கேட்கிறோம். அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்?. பிற மாநிலத்திற்கு மட்டும் கேட்காமலே கொடுக்கிறார்கள். தமிழகத்தை மட்டும் பிரித்து பார்க்கிறார்கள்" என்று காட்டமாக தனது பதிலை தெரிவித்தார்.