#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக மாணவி.! மு.க.ஸ்டாலின் பாராட்டு.!
சுவீடன் நாட்டில் பிரபல எரிசக்தி நிறுவனமான டெல்ஜ் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் உள்ள அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தை தெரியப்படுத்தவும், காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மாற்றியமைக்கவும் தேவையான ஆலோசனை, திட்டங்களை கட்டுரைகளாக அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது. இதில், 12 வயது முதல் 17 வயதுள்ளவர்கள், இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு அனுப்பப்படும் சிறந்த கட்டுரை மற்றும் சிறந்த திட்டத்துக்கு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறது இந்நிறுவனம். இந்தநிலையில் இந்தியாவில் இரண்டு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மகாராஷ்ட்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த வருடம் நடத்தப்பட்ட போட்டியில், உலகின் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த திருவண்ணாமலையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் வினிஷா என்ற மாணவி கலந்துகொண்டு தான் கண்டறிந்த சோலார் சலவைப் பெட்டியைப் போட்டிக்கு அனுப்பியுள்ளார். அவர் தயாரித்த சோலார் பெட்டியின் மீது சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரத்தை தயாரித்து, அதன் வழியாக துணியை இஸ்திரி செய்வதே இதன் பயன்பாடு என அந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளார்.
தமிழக மாணவி வினிஷா கண்டுபிடித்த சூரிய சக்தியில் இயங்கும் சலவைப் பெட்டி இந்தியாவின் காற்றின் தரம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் பாராட்டியுள்ளனர். ஸ்வீடன் நாட்டின் பெருமைமிகு விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் திருவண்ணாமலை மாணவி வினிஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
சூரிய ஒளியால் இயங்கும் சலவைப் பெட்டியைக் கண்டுபிடித்ததற்காக ஸ்வீடன் நாட்டின் பெருமைமிகு விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் திருவண்ணாமலை மாணவி வினிஷாவுக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) November 18, 2020
பாலசக்தி புரஷ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறார்.
பாராட்டுகள்! pic.twitter.com/nojzUB99i9
வெற்றிபெற்ற திருவண்ணாமலை மாணவி வினிஷாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "சூரிய ஒளியால் இயங்கும் சலவைப் பெட்டியைக் கண்டுபிடித்ததற்காக ஸ்வீடன் நாட்டின் பெருமைமிகு விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் திருவண்ணாமலை மாணவி வினிஷாவுக்கு வாழ்த்துகள்! பாலசக்தி புரஷ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறார். பாராட்டுகள்! என தெரிவித்துள்ளார்.