மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.! எந்த நுழைவு தேர்வும் நடத்த கூடாது.! பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், "நாட்டில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. உயர்கல்வி வாய்ப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்களே அடிப்படையாக இருக்க வேண்டுமென்பது எனது அரசின் உறுதியான கருத்து. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
I've written to @PMOIndia urging him to cancel the conduct of NEET and all other national level entrance exams, keeping in mind the safety of the students, as the reasons for cancelling the class XII board exams are equally applicable to entrance exams as well. pic.twitter.com/It2ngW55r2
— M.K.Stalin (@mkstalin) June 5, 2021
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும். இந்த சூழலில், எந்தவொரு தொழிற்கல்விக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் நலனுக்கு ஆபத்தானது. எனவே, நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்." என்று கேட்டுக்கொண்டுள்ளார்.